மாத இறுதியில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் செல்லும் இலங்கை ஜனாதிபதி

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க செப்டம்பர் 22ம் திகதி அமெரிக்கா செல்ல உள்ளார்.
தனது பயணத்தின் போது, பல நாட்டுத் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார், அதே போல் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸையும் சந்திக்க உள்ளார்.
அமெரிக்காவில் தனது பணிகளை முடித்த பிறகு, ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க செப்டம்பர் 26ம் திகதி ஜப்பானுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜப்பானில், செப்டம்பர் 27 ஆம் திகதி சர்வதேச வர்த்தக கண்காட்சியில் கலந்து கொண்டு, மூத்த ஜப்பானிய அதிகாரிகளுடன் உயர் மட்ட கலந்துரையாடல்களில் ஈடுபட உள்ளார்.
(Visited 1 times, 1 visits today)