இந்தியா பயணமாகும் இலங்கை ஜனாதிபதி- பிரதமரை சந்திக்க திட்டம்!
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தனது முதல் அரச விஜயமாக டிசம்பர் 15 மற்றும் 17 க்கு இடையில் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த மாநாட்டின் போது, ஜனாதிபதி தனது விஜயத்தின் போது இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
வெளிவிவகார அமைச்சர் மற்றும் பிரதி நிதி அமைச்சர் ஆகியோர் ஜனாதிபதியுடன் செல்வார்கள் என கலாநிதி ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
(Visited 2 times, 1 visits today)