நாளை சீன ஜனாதிபதியை சந்திக்கும் இலங்கை ஜனாதிபதி
சீனாவிற்கு நான்கு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நாளை (15.1.2025) பிற்பகல் பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 2 times, 1 visits today)