இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த கோரிக்கை

பொருளாதார மாற்ற சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு வாக்களிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிராந்திய அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று பிற்பகல் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்றது.
கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இது இடம்பெற்றுள்ளது.
(Visited 8 times, 1 visits today)