மஹிந்தவின் வீட்டில் குவியும் இலங்கை அரசியல்வாதிகள்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பேரவை இன்று பிற்பகல் 3.00 மணிக்கு கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விஜேராம மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடவுள்ளது.
அரசியல் அதிகார சபைக்கு விசேட கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு இரண்டு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இக்கலந்துரையாடலில், பல உத்தரவுகளை பிறப்பிப்பதற்கான கட்சியின் ஒழுக்காற்று சபையின் அதிகாரம் குறித்தும், தணிக்கை செய்யப்பட்ட கட்சியின் கணக்கு அறிக்கை மார்ச் 31ஆம் திகதி தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது குறித்தும் கட்சியின் ஒழுக்காற்று சபைக்கு தெரிவிக்கப்படும்.
கட்சியின் ஒழுக்காற்று சபைக்கு தேவையான உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரம் கட்சியின் அரசியல் அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் அவ்வாறான சில உத்தரவுகளை பிறப்பிக்க ஒழுக்காற்று சபைக்கு அதிகாரம் வழங்கப்படுவதாகவும் அதே வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இக்கலந்துரையாடலில் சுதந்திர ஜனதா சபையின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமகி ஜன பலவேகயவின் புதிய அரசியல் கூட்டணியில் இணைவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.