ஐசிசி தரவரிசையில் இலங்கை வீரர்கள் ஆதிக்கம்
ஐசிசி தரவரிசையில் இலங்கை அணியின் முக்கிய வீரர்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளனர்.
இலங்கை அணியின் தொடக்க வீரர் பெத்தும் நிஸ்ஸங்க, டி20 துடுப்பாட்ட தரவரிசையில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து, அனுபவ வீரர்களான குசல் ஜனித் பெரேரா 9வது இடத்திலும், குசல் மெண்டிஸ் 18வது இடத்திலும் உள்ளனர்.
இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க, டி20 பந்துவீச்சுத் தரவரிசையில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார 6வது இடத்திலும், சுழல் பந்துவீச்சாளர் மஹேஷ் தீக்ஷன 16வது இடத்தையும் இடம்பிடித்துள்ளனர்.
இந்த முன்னேற்றங்களுக்கு மத்தியில், இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்பதற்காக நேற்று நாட்டை விட்டுப் புறப்பட்டது.
இந்தத் தொடருக்கான அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என இலங்கை அணித் தலைவர் சரித் அசலங்க தெரிவித்துள்ளார்.





