இலங்கை

தினமும் 6.5 பில்லியன் ரூபா கடனாளிகளாக மாறியுள்ள இலங்கை மக்கள்!

கடந்த 26 மாதங்களில் உள்ளுரில் ஆட்சியாளர்கள் பெற்ற கடன் தொகையை வைத்துப் பார்த்தால் இந்நாட்டு மக்கள் தினமும் 6.5 பில்லியன் ரூபா கடனாளிகளாக மாறியுள்ளதாக பொருளாதார புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட பேராசிரியர் திரு.வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

நாடு கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக புதிய பொருளாதார சீர்திருத்த தொடர் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என  அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஒவ்வொரு மாதமும் இந்நாட்டு மக்கள் 196 பில்லியன் ரூபா கடனாளிகளாக்கப்படுகின்றனர். ஒவ்வொரு நாளும் நாம் 6.5 பில்லியன் ரூபா கடனில் உள்ளோம்.

இவ்வகையான கடன் தொடர்பான கடுமையான நெருக்கடியில் இலங்கை உள்ளது. அதே நேரத்தில் 2021 உடன் ஒப்பிடும்போது நாட்டின் பணவீக்கம், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 106% அதிகரித்துள்ளது.

மற்றும் நமது உணவு மற்றும் சேவைகளின் விலைகள் 138% அதிகரித்துள்ளது மிகக் குறுகிய கால அவகாசம் மூலம், மக்கள் தேவையான பின்னணியை உருவாக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்