புனித நகரமான மதீனாவுக்கு இலங்கை அமைச்சர்கள் வருகை
 
																																		இலங்கையின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர், பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி மற்றும் இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலஃபர் ஆகியோர் அண்மையில் சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்ததன் ஒரு பகுதியாக புனித நகரமான மதீனாவிற்கு அண்மையில் விஜயம் செய்தனர். .
நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு மற்றும் இஸ்லாமிய நாகரிகத்தின் சர்வதேச கண்காட்சி மற்றும் அருங்காட்சியகத்தை ஆராயும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட அமைச்சர், முஹம்மது நபியின் வாழ்க்கை மற்றும் மதீனாவில் இஸ்லாமிய நாகரீகத்தின் வளர்ச்சி பற்றிய நுண்ணறிவுகளைப் பெற்றார். மேலும், இஸ்லாமிய வரலாற்றில் கட்டப்பட்ட முதல் பள்ளிவாசலான குபா பள்ளிவாசலுக்கு அமைச்சர் விஜயம் செய்தார்.
முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸும் அமைச்சருடன் சென்றிருந்தார்.
 
        



 
                         
                            
