இலங்கையில் மனைவியை கொலை செய்த கணவருக்கு மரண தண்டனை விதிப்பு!

மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கணவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என்.எம். அப்துல்லாஹ் இன்று (05) திறந்த நீதிமன்றில் இந்த தீர்ப்பை வாசித்து காட்டினார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி கந்தளாய் பகுதியில் தனது மனைவியான முஹம்மது பௌஸ் ரஷ்மியா (29வயது) என்பவரை கூறிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக கணவர் (சுபியான் இன்சான் 38வயது) மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை திருகோணமலை நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது.
இந்நிலையில் குறித்த வழக்கினை அரச சட்டத்தரணி டி தர்ஷிகா நெறிப்படுத்தியதுடன் 296 ம் இலக்க குற்றச்சாட்டின் கீழ் கொலை குற்றச்சாட்டை புரிந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபருக்கு இன்றைய தினம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் நீதிபதியாக திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் கடைமையாற்றும் சந்தர்ப்பத்தில் வழங்கிய முதல் தீர்ப்பு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.