பிரித்தானியாவில் இலங்கைப் பெண் குத்திக்கொலை; குற்றத்தை ஒப்புக்கொண்ட முன்னாள் கணவன்
பிரித்தானியாவின் கார்டிப் (Cardiff) நகரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்த பயங்கரமான கொலைச் சம்பவத்தில், 37 வயதான இலங்கைப் பின்னணியைக் கொண்ட திஸார வேரகலாகே (Thisara Weragalage) தனது முன்னாள் மனைவியைக் கொலை செய்ததை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
32 வயதான நிரோதா நிவுன்ஹெல்லா (Nirodha Niwunhella), கடந்த ஆகஸ்ட் 21 அன்று கார்டிப்பின் ரிவர்சைடு பகுதியில் இரண்டு கார்களுக்கு இடையில் பலத்த காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
ஆரம்பத்தில் இந்தக் கொலையை மறுத்து வந்த திஸார, நேற்று முன்தினம் நியூபோர்ட் கிரவுன் நீதிமன்றத்தில் (Newport Crown Court) முன்னிலையானபோது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
சம்பவத்தன்று கத்தியை வைத்திருந்ததையும், முன்னாள் மனைவியைக் கொலை செய்ததையும் அவர் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, நீதிபதி டேனியல் வில்லியம்ஸ் தீர்ப்பை வரும் பிப்ரவரி 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
உயிரிழந்த நிரோதா ஒரு அன்பான பெண் என்றும், சமூகத்திற்கு அவர் ஆற்றிய சேவைகள் என்றும் அண்டை வீட்டாரும் குடும்பத்தினரும் கண்ணீர் மல்க நினைவு கூர்ந்து வருகின்றனர்.





