அமெரிக்காவின் குற்றச்சாட்டை தொடர்ந்து அதானியின் திட்டங்களை மீள் பரிசீலனை செய்யும் இலங்கை அரசு!
																																		அமெரிக்காவில் இந்திய கோடீஸ்வரரான கௌதம் அதானிக்கு எதிராக இலஞ்சக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் இவ்விடயத்தை தீவிரமாக எடுத்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அதானியின் தற்போதைய திட்டங்களை அரசாங்கம் மீளாய்வு செய்து வருவதாக அவர் கூறினார்.
எவ்வாறாயினும், இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில் அதானியின் திட்டங்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அரசாங்கம் தற்போது நிலைமையை மதிப்பீடு செய்து வருவதாகவும் அமைச்சர் ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மேலதிக மதிப்பீட்டிற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்களிடம் இருந்து அறிக்கைகள் கோரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
(Visited 4 times, 1 visits today)
                                    
        



                        
                            
