இலங்கையில் விவசாயிகளின் பிரச்சினைகளை விரைவில் தீர்வு – ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையில் விவசாயிகளின் விவசாய நிலங்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதற்கான முறையான பொறிமுறையை வகுக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மொனராகலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மொனராகலை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த ஆண்டு புதிதாக 62,000 பேரை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)