செய்தி விளையாட்டு

ஓய்வை அறிவித்த இலங்கை வீரர் திமுத் கருணாரத்ன

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் திமுத் கருணரத்ன தனது 100வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.

நாளை தொடங்கும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி திமுத் கருணரத்னவின் கடைசி போட்டியாகும்.

இலங்கை அணியின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான இவர், கிட்டத்தட்ட 14 ஆண்டுகளில் 99 டெஸ்ட் போட்டிகளில் 16 சதங்கள் மற்றும் 34 அரைசதங்களுடன் 40க்கும் குறைவான சராசரியில் 7,172 ரன்கள் எடுத்துள்ளார்.

50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் திமுத் கருணரத்ன ஒரு சதம் மற்றும் 11 அரைசதங்களுடன் 1,316 ரன்கள் எடுத்துள்ளார்.

“ஒரு டெஸ்ட் வீரர் ஒரு வருடத்திற்கு 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவும், தனது ஃபார்மைத் தக்கவைக்கவும் தன்னைத்தானே ஊக்கப்படுத்திக் கொள்வது கடினம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகம் செய்யப்பட்ட கடந்த இரண்டு-மூன்று ஆண்டுகளில், நாங்கள் மிக குறைந்த இருதரப்பு தொடர்களில் தான் விளையாடினோம்.”

“எனது தற்போதைய ஃபார்ம்ஐ கருத்தில் கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி (2023-25) முடிவு அன்று எனது 100 டெஸ்ட் போட்டியை விளையாடி, ஓய்வு பெற இதுவே சரியான நேரம் என்று நினைத்தேன்,” என்று கருணரத்ன தெரிவித்துள்ளார்.

(Visited 41 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி