இலங்கை கிரிக்கட்டுக்கு தடை!! இரு தரப்பினர் பரஸ்பர குற்றச்சாட்டு
சர்வதேச கிரிக்கட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டதன் பின்னணியில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவும் கிரிக்கெட் நிறுவனமும் இன்று தனித்தனியாக ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியிருந்தனர்.
தற்போதைய கிரிக்கட் நெருக்கடி மற்றும் உறுப்பினர் சேர்க்கை இடைநிறுத்தம் குறித்து இரு தரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டின.
எவ்வாறாயினும், இலங்கையின் கிரிக்கட் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக சர்வதேச கிரிக்கட் பேரவையில் மேன்முறையீடு செய்ய உள்ளதாக விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் சங்கம் அழைப்பு விடுத்துள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பதில் செயலாளர் கிரிஷாந்த கபுவத்த, இடைநிறுத்தப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் உறுப்புரிமையை மீளப் பெற்றுக் கொள்வதற்கு கடுமையாக உழைக்கவுள்ளதாக தெரிவித்தார்.
தமது பாதுகாப்பை அதிகரிக்குமாறு அமைச்சர் திரன் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் கோரிக்கை விடுப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தனது ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
எனினும் பாதுகாப்பு தொடர்பில் அமைச்சரின் கருத்து தொடர்பில் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் உறுப்பினர்கள் ஒழுக்கம் இன்றி பதவியில் இருக்க நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் விளையாட்டு அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.