இலங்கை அமைச்சரவையில் மாற்றம் – பசிலின் கோரிக்கைக்கு ரணில் இணக்கம்
எதிர்வரும் பெப்ரவரி மாதம் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொளள்ப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த தேர்தலை இலக்கு வைத்து இந்த திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த திருத்ததத்தின் போது பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவிற்கு அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனித் தனியாக இருக்கும் நிறுவனங்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதை காட்டி இந்த திருத்தத்தை மேற்கொள்ள அரசாங்கம் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தின் ஆரம்ப தவணை பெறப்பட்ட போது கூறப்பட்ட, திறைசேரி அதிக அமைச்சரவை உறுப்பினர்களை பராமரிக்க கூடிய நிலைமைக்கும் வரும் வரை இது நடக்காது என்று கூறப்படுகிறது.
இதேவேளை, இந்த திருத்தங்கள் பெப்ரவரி மாதத்தில் மேற்கொள்ளப்படவுள்ளமையினால், அதற்கு எதிர்ப்புக்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.