இலங்கை வீரர் குசல் மெண்டிஸுக்கு துபாயில் அவசர அறுவை சிகிச்சை
இலங்கை வீரர் குசல் மெண்டிஸுக்கு(Kusal Mendis) சிறுநீர்ப்பையில் கற்கள் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அவர் துபாயில்(Dubai) அவசர அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில்(United Arab Emirates) நடைபெற்று வரும் ILT20 போட்டியில் பங்கேற்று வந்த மெண்டிஸுக்கு உடனடி அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது, சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வருகிறார் என்று அவர் விளையாடும் ஷார்ஜா வாரியர்ஸ்(Sharjah Warriors) அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, ILT20 தொடரின் மீதமுள்ள போட்டிகளில் இருந்து அவர் விலகியுள்ளதாகவும் அவருக்கு பதிலாக மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.




