செய்தி விளையாட்டு

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றிய இலங்கை

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 09 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

தம்புள்ளையில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அதிகபட்சமாக அணித்தலைவர் Rovman Powell 37 ஓட்டங்களையும், Gudakesh Motie 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Maheesh Theekshana மற்றும் Wanindu Hasaranga தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இதன்படி 163 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் Kusal Mendis அதிகபட்சமாக 68 ஓட்டங்களையும், Kusal Perera 55 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றதுடன், Pathum Nissanka 39 ஓட்டங்களையும் பெற்றார்.

See also  பிரித்தானிய விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு விசேட அறிவிப்பு - மாற்றங்கள் தொடர்பில் அவதானம்

இதற்கமைய மூன்று போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு 20 தொடரை இலங்கை அணி ஒன்றுக்கு இரண்டு என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.

அத்துடன் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இலங்கை அணி கைப்பற்றியுள்ள முதலாவது இருபதுக்கு 20 தொடரும் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content