செய்தி

முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி

நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி டக்வத் லூயிஸ் முறைப்படி 45 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

தம்புள்ளையில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் தடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.2 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 324 ஓட்டங்களை பெற்ற போது போட்டியில் மழை குறுக்கிட்டது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் Kusal Mendis 143 ஓட்டங்களையும், Avishka Fernando 100 ஓட்டங்களையும் பெற்று ஒருநாள் போட்டியில் தமது 4ஆவது சதத்தினையும் பூர்த்தி செய்தனர்.

பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் Jacob Duffy 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

மழை குறுக்கிட்டதால் டக்வத் லூயிஸ் முறைப்படி நியூசிலாந்து அணிக்கு 27 ஓவர்களில் 221 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 27 ஓவர்கள் 09 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை பெற்ற நிலையில் தோல்வியை தழுவியது.

துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பில் Will Young அதிகபட்சமாக 48 ஓட்டங்களையும் Tim Robinson 35 ஓட்டங்களையும் Michael Bracewell 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Dilshan Madushanka 03 விக்கெட்டுக்களை வீழ்த்தியதுடன் Maheesh Theekshana மற்றும் Charith Asalanka ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் இலங்கை அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

(Visited 2 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி