வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இலங்கை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 99 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 285 ஓட்டங்களை பெற்றது.
பின்னர் 286 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 39.4 ஓவர்கள் நிறைவில் 186 ஓட்டங்களை பெற்ற நிலையில், சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஹ்ரிடோய் அதிகபட்சமாக 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை இலங்கை அணி ஒன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
அத்துடன் இலங்கை அணி 6 ஆண்டுகளுக்குப் பிறகு பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.