Site icon Tamil News

மீண்டும் இலங்கை அடிமைப்படும்…!!!

இலங்கையில் இந்திய எதிர்ப்பு வாதம் என்பது ஒரு வரலாற்றோடு சம்மந்தப்பட்டது மாத்திரமல்ல சில காலங்களில் அது அரசியல் மற்றும் கலாச்சாரத்தோடு சம்மந்தப்பட்டதாகவும் இருந்து வந்திருக்கிறது. இதை பல் வழி உதாரணங்கள் மூலம் எடுத்துக்காட்டக்கூடிய விடயம். இது இன்றைய நிலையில் புதிய பரிணாமம் எடுத்துக்கொண்டு மதத்தினூடகவும் பொருளாதார நடவடிக்கையினூடாகவும் வெளிப்பாயப்பார்க்கிறது என்பதற்கு நல்லதொரு உதாரணந்தான் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்கள் தெரிவித்திருந்த கருத்து.

எமது நாட்டை துண்டங்களாக பிரித்து சர்வதேச சக்திகளுக்கு விற்பனையை மேற்கொண்டு அழிவின்பால் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. தற்போது இலங்கையை இந்தியாவுடன் இணைக்கும் தரைவழி பாதைக்காக பாலம் அமைக்கப்போவதாக தெரிவிக்ப்படுகிறது. இது நாட்டு மக்களின் விருப்பத்தடன் நடை முறைப்படுத்தப்படும் விடயமல்ல. அவ்வாறு அமைக்க எடுக்கும் முயற்சிக்கு மக்களிடம் ஆணை பெறப்படவேண்டும். சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்ற ஆலோசனையை பேராயர் காரசாரமாக முன்வைத்துள்ளார். இது ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக மாற்றப்படலாம். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பிராந்திய உறவுக்கு ஆப்பு வைக்கும் கருத்தாகவும் கருதப்படலாம்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பம் தரைவழி பாதை தொடர்பாக மீண்டும் சூடு பிடித்துள்ள நிலத்தொடர்பு பாதை விவகாரம். இது தொடர்பாக போர்க்கொடி தூக்கும் கடும் போக்காளர்கள், இந்திய முயற்சிக்கு எதிர்ப்பு காட்டுகிறவர்கள் இதுவரை சீனாவை எதிர்காதது ஏன் என்று கேட்கப்படுகிறது.

பூகோள ரீதியாக இலங்கை இந்தியாவுக்கு அருகில் இருக்கும் ஒரு தீவு என்பதைவிட வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டு இரு நாடுகளுக்குமான தொடர்புகள் அன்னியோன்யமாக இருந்தும் வந்துள்ளது. இலங்கை மீது இந்திய மன்னர்கள் படை எடுத்துவந்திருக்கிறார்கள். இந்திய மன்னர்களுக்கு இலங்கை மன்னர்கள் படை அனுப்பி போருக்கு உதவியுள்ளார்கள் ஆட்சி மாற்றத்தை கொண்டுவந்திருக்கிறார்கள் பௌத்த மதத்தின் தூதுவரான கௌதம புத்தர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பல தடவைகள் வந்து சென்றதாக மகாவம்சத்தின் செய்தி.பௌத்த போதனையை பரப்பும் நோக்கில் மஹிந்தன் தன் குழுவினருடன் இந்தியாவிலிருந்து இலங்கை வந்ததாக ஆன்மீக செய்திகள் தெரிவிக்கின்றன.

அன்னியர் ஆட்சிக்காலத்தில் இலங்கை, இந்திய பிரதேசங்கள் ஒரே குடையின் கீழ் ஆளப்பட்டிருக்கிறது. இங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்காக 200 வருடங்குளுக்கு முன் மலையக தொழிவாளர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். இந்தியப்பிரதமர் இந்திரா காந்தி நட்புக்காக கச்சதீவை இலங:கைக்கு தாரை வார்த்து கொடுத்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.வர்த்தக நடவடிக்கைகள் இடம் பெற்றிருக்கிறது இந்து தத்துவத்தின் அடிப்படையிலையே பஞ்ச சீலக்கொள்கைள் வியாபிக்கப்படடிருக்கிறது. இலங்கையை ஆண்ட இராவணன் இந்தியாவின் பல பிரதேசங்களை கட்டி ஆண்டான் என இராமயணம் பகருகிறது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்வர இந்தியா உதவியதாக முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ கோத்தபாய ராஜபக்ஷ வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டிரக்கிறார்கள். அண்மையில் இடம் பெற்ற பொருளாதார கெடுபிடிகளின்போது இலங்கைக்கு உதவிய முதாவது நாடு இந்தியா என ஆட்சிளர்களே புகழ்ந்து பாராட்டிள்ளனா.

இவ்வாறானதொரு வரலாற்றுப்பின்னணி இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருந்துவருகிறபோது ஒரு காலத்தில் எமக்கு பருப்பு கொண்டுவந்து போட்டார்கள், இராணுவத்தை கொண்டுவந்து அடக்கி ஆண்டார்கள் 13 திருத்தத்தை திணித்தார்கள்.இவ்வாறான நிலையில் பாலம் ஒன்றை அமைத்து நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லப்போகிறீர்களா? என பேராயர் தேசவாதம் பேசியிருக்கிறார். அவரின் கருத்துப்படி இந்த நாடு ஒரு சதந்திரநாடு எப்போதும் எந்த நாட்டுக்கும் அடிமைப்பட்ட நாடல்ல என்பது பேராயரின் வாதமாகும்.

தற்கால அரசில் கோட்பாட்டின் அடிப்படையில் எல்லா நாடுகளும் சுதந்திரத்தை அனுபவிக்கவேண்டும் அடிமையாக இருக்க முனயாது தன்னாட்சி அதிகாரம் கொண்டதாக தனக்கான மக்கள் பிரதேசம் அரசிய் யாப்பு கொண்டதாக இருக்கவேண்டும் என்பது சகல நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம்.

கடந்த ஜூலை மாதம் இரண்டுநாள் விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி இந்தியப்பிரமர் நரேந்திர மோடியை சந்தித்து உரையாடியமை, சில ஒப்பந்தங்களி;ல் கைச்சாத்திட்டமை அரசில் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாக கருதப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க பிரதமராக, எதிர்க்கட்சி தலைவராக இருந்த காத்தில் மேற்கொண்ட பயணங்களைவிட நாட்டின் தலைவராக இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயம் உலக அரங்கில் முக்கியத்துவம் கொண்டதாக கருதப்படுகிறது.

இந்திய விஜயத்தின்போது ஜனாதிபதி ஐந்து முக்கிய ஒப்பந்தங்களில் ஜ கையெழுத்திட்டுள்ளார் என்ற விடயமும் அதில் இந்தியாவை இலங்கையுடன் இணைக்கும் தரைவழி இணைப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எரிபொருள் குழாய் இணைப்பு நிதி விவகாரம் மற்றும் தரைவழி இணைப்பு ஆகிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டபோதும் தரைவழி இணைப்பு தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் முக்கியமானதாக பேசப்படும் நிலையிலையே பேராயரின் விமர்சிப்பும் கண்டனமும் முக்கிய அரசி;யல் வாதமாக பார்க்கப்படுகிறது.

ஏலவே கடும் போக்காளர்கள் என்றவகையில் இவ்வொப்பந்தம் தொடர்பாக வரிந்து கட்டிக்கொண்டு பேராதனைப்பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியரும் ஐக்கிய மக்கள் சக்தி புத்திஜீவிகள் ஒன்றியத்தின் தலைவருமான பேராசிரிர் ஆனந்த ஜெயவிக்கிரம இலங்கையை இந்தியாவின் உப மாநிலமாக ஆக்கும் முயற்சியி;ல்தான் பால நிர்மாணத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பகிறது. இதனால் இந்தியா இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட முயற்சிக்கும் இலங்கையின் தேவைப்பாடுகள் நிறைவேறாது. எனவும் பேராசிரியர் கடுமையாக விமர்சித்துள்ளார், அதேபோல பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகரா நாட்டின்பாதுகாப்புக்கு தரைவழி இணைப்பு அச்சுறுத்தலாக அமையும் என போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இலங்கையை இந்தியாவுடன் பாம்பன் பாலத்தினூடாக இணைக்கும் திட்டம் சுமார் 400 வருடங்களுக்கு முன் பிரித்தானியரால் மேற்கொள்ளப்பட இருந்தபோதும் அது முன்னெடுக்கபபடாத நிலையில் கடந்த 2001 ஆம் ஆண்டும் அதன்பின்னும் இது தொடர்பாக பேச்சவார்த்தைகள் நடத்தப்பட்டபோதும் இருநாடுகளுக்குமிடையி; உடன்பாடு காணப்படவி;லை. இதற்கு இலங்கையில் இடம் பெற்ற உள்நாட்டு யுத்தம் இடந்தரவி;லை ஆட்சியாளர்களுக்கு இடையில் உடன்பாடு காணப்பட முடியாமையினால் திட்டத்தை முன்னெடுக்க முடியவில்லை.

இராமர் பாலமென்பது தமிழ் நாடு இராமேஸ்வரத்துக்கும் இலங்கையில் மன்னாருக்கும் இடையில் உள்ள சுண்ணாம்பு கற்களால் ஆன ஆழமற்ற மேடுகள்ஆகும். 30 கிலோ மீற்றர் கொண்டதாக இது கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த அணையானது மன்னார் வளைகுடாவையும் , பாக்கு நீரணையையும் பிரிக்கும் ஒரு பூகோள மாற்றமாகும். இப்பாலம் அமைந்திருக்கும் கடலின் ஆழமானது சுமார் 3 ஆடி தொடக்கம் 30 அடி வரையிலானது.

2005 ஆடம் ஆண்டு சேது சமுத்திரத்திட்டத்தின் கீழ் இப்பாலத்தை தனுஷ்கோடிக்கு அருகில் ஆழப்படுத்தி. கப்பல் போக்குவரத்துக்கு ஏற்றதாக மாற்றும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 400 கிலோ மீற்றர் தூரமும் 30 மணிநேர கடல்பயணமும் மிச்சப்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்பட்டது.

காலம், காலமாக பாலம் அமைக்கும் யோசனைகள் முன்னெடுக்கப்பட்டுவந்தபோதும் இருநாடுகளுக்குமிடையில் ஏற்பட்டுக்கொண்ட அரசியல் மாற்றங்கள், அரசாங்கங்களின் ஸ்திரமின்மை காரணமாக தடைகள் ஏற்பட்டன. இலங்கையின் பிரதமராக ரணில்விக்கிரம சிங்க பதவி வகித்த காலமான 2001—2004 காலப்பகுதியி;ல் மீண்டும் இத்திட்டத்தை செயற்படு;த்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடுமையாக தனது எர்திப்பை முன்தை;தார். புலிகளின் ஊடுருவல் அதிகமாகலாம் அது தமிழ் நாட்டுக்கு குந்தகமாக அமையுமென்று காரணம்காட்டி ஜெயலலிதா தன் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் இலங்கையில் உருவாகிய காலத்தில் இந்தியாவின் வீதி போக்குரத்து அமைச்சராக இருந்த நிதின் கட்கரி 305 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 23 கிலோ மீற்றர் நீளமான பாலததை கட்டுவதற்கான முன் மொழிவுகளை இந்திய பாராளுமன்றில் கொண்டுவந்தார். இதை அறிந்த ஜனாதிபதி மைத்திரிபாலாவுக்கு எதிரான எதிர்க்ட்சியினரும் இந்திய எதிர்ப்பு வாத குழுவினரும் தங்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய நிலையில் 2016 ஆம் ஆண்டு வாசுதேவ நாணயக்கார இது பற்றி கருத்து தெரிவிக்கையில் “இலங்கை இந்திய தரைவழிப் பாலம் நிர்மாணிக்கப்பட்டால் தமிழ் நாட்டில் வாழும் மில்லியன் கணக்கான தமிழர்கள் இலங்கைக்குள் புகுந்து இலங்கையை சதுப்பு நிலமாக்கிவிடுவார்கள் என்றும் ஹெல உறுமயவின் தவைர் உதய கம்மன்பில பாலத்தை இடித்து அழித்துவிடுவேன் என்று கர்ஜித்தார்கள்..

துற்போது நிர்மாணிக்க திட்டமிடப்படடிருக்கும் நிர்மாண, வடிவமைப்பை நோக்குவோம். இதுபற்றி இவ்வாறு விளக்கப்படுகிறது. இந்திய தனுஸ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரையிலான கடல்வழி முறையில் சுமார் 48 கிலோ மீற்றர் தரைவழிப்பாதையை உருவாக்குவது இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இதை இணைப்பதற்கான உத்தேச செலவீனமாக சுமார் 32 000 ஆயிரம் கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் திட்டத்தை வரைந்த பொறியிலாளர்கள் தெரிவித்திரக்கிறார்கள்.

இந்த திட்டத்துக்கான பூர்வாங்க வராற்றை சுருக்கமாக பார்ப்போமானால் இராமர் மனைவியான சீதையை இலங்கைவேந்தன்; இராவணன் இலங்கைக்கு கடத்திக்கொண்டு போனதன்கரணமாக இராம இராவண யுத்தம் ஏற்பட்டது. இராவணன் புஷ்பக விமானத்தில் சீதையை கடத்திவந்து இலங்கையில் சிறை வைத்த நிலையில் சீதையை மீட்க இலங்கை வந்த இராமன் ஆழியை கடக்கவேண்டிய அவசியத்தை தெரிந்துகொள்கிறான். இராமரும் அவரது படைகளும் மண்மேடுகளை ஆதாரமகககொண்டு ஐந்து நாட்களுக்குள் இந்த அணையை நிர்மாணிக்கிறார்கள். அந்த அணையே இராமர் அணை. என அழைக்கப்பட்டது இந்த அணைபற்றி பாடிய மகாவி பாரதி தீர்க்க தரிசனத்துடன்

சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என்று பாடியுள்ளார்.

இந்த இராமர் அணை நிறுவப்பட்ட துணையாக இருந்தது 13 மண்திடல்கள் என்றும் .இதில் 6 திடல்கள் இந்தியாவுக்கு சொந்தமானது என்றும் 7 திடல்கள் இலங்கைக்கு சொந்தமானது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த திடலை அதரமாகக்கொண்டே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் அணை அமைக்கப்படவேண்டும் என்ற முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும், இராமர் அணையை நிர்மூலம் ஆக்குவது தொன்மத்தை அழிக்கும் செயலென்று இந்தியாவின் எதிர்ப்பு இயக்கமான இராம கர்ம பூமி இயக்கம் தனது எதிர்ப்பை தெரிவித்ததோடு இந்தியாவின் மூத்த அரசியல் வாதியான சுப்பிரமணிய சுவாமி உச்ச நீதி மன்றில் வழக்கொன்றையும் தாக்கல் செய்திருந்தார்.

இத்தரை வழிப்பாதையை உருவாக்குவதற்கு பிரயத்தனங்களை மேற்கொண்டுவரும் இந்தியா என்னவகை இலாபத்தை அடைய விரும்பகிறது என்பது கவனத்துக்குரிய தேடலாகும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தரைவழி பாதை தொடர்பை ஏற்படுத்துவதன் மூலம் இந்தியா அடைய விரும்பும் இலாபம் என்ன என்பதை தெரிநு;துகொள்வோமாயின் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக வாணிபத் தொடர்பை பெருக்க முடியும், போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்த முடியும், மின் வலைப்பின்னலை விரிவாக்கவதன் மூலம் இலங்கையின் மின் வலு சக்தியை மேம்படுத்த முடியுமென பொருளாதார அறிஞர்கள் காரணம் கற்பிக்கிறார்கள்.இக்காரணங்கள் ஒரு பொருளாதார முறைக் காரணங்களாக கற்பிக்கப்பட்டாலும் இதை மீறிய அரசியல் காரணங்களும் இருக்கிற தென்பதற்கு பல உதாரணங்கள் சான்றாக சாட்சி பகருகிறதெனவும் கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியாவின் பிராந்திய நலன் வல்லரசு கனவு என்பனவும் இன்னும் பல எதிர்பார்ப்புக்களும், சூழ்ந்து நிற்கும் காரணங்களாக காட்டப்படுகிறது.

இலங்கையில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன்பின் சீனாவின் ஊடுருவல் இலங்கையில் அதிகரித்துக்கொண்டிருக்கிற தென்பதற்கு போதிய சன்றுகள் கூறப்படுகிறது. திருமதி ஸ்ரீமா அமைமார் பிரதமராக இருந்த காலத்தில் சீனாவின் இலங்கைக்கான உதவி பெரும் பங்கு வகித்தபோதும் அவை பொருளாதார சமூக பார்வை கொண்டாகவே இருந்திருக்கிறது என கூறப்படுகிறது. உதாரணமாக சீனாவின் உதவியில் நிர்மாணிக்கப்பட்ட பண்டாரநாயக்க சர்வதேச விமான நியைம், பண்டாரநாயக்க ஞாபகார்த்தமண்டபம் என்ற உதவிகள் அனைத்தும் இலங்கையின் சர்வதேச பார்வை அந்தஸ்த்தை உயர்த்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட உதவிகளாகவே இருந்திருக்கிறது. ஆனால் கடந்த இருதசாப்தத்துக்கு மேலாக சீனாவின் இலங்கை மீதான கரிசனை வெறும் பொருளாதார காரணஙகளை மட்டும் கொண்டதாக கருதிவிட முடியாது.

சீனா இலங்கைக்கு யுத்த தளபாட உதவிகள், கடன் உதவிகள் இராணுவ பயிற்கிகள,; நில அபிவிருத்தி உதவிகள் என்ற வகையி;ல் பல்வேறு உதவிகளை நல்கிய வண்ணம் இருப்பதாக கூறப்படுகிறது. இது இந்தியாவால் அவதானித்து வரப்பகிற விடயம். உதாரணமாக அம்பாந்தோடை துறைமுகத்தை சீனாவுக்கு தாரை வார்த்துக்கொடுத்தமை,. துறைமுக நகரமென்ற அபிவிருத்திப்போர்வையில் காலிமுக கடல்பிரதேசம் ஹொட்டல் நிர்மாணம் யாழ்ப்பாணத்தில் பல்வேறு பண்ணை விஸ்தரிப்புக்கள், தீவுகளின் அபிவிருத்திகள் என்ற கோதாவில் சீனாவை இலங்கையில் ஆழ பதியவிடும் நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டிருக்கும் இந்தியா இதற்கான மாற்றுவழியாகவே தரைவழிப்பாதை தொடர்பை தேர்ந்தெடுதிருக்கிறதென்பது சில அரசியல் விமர்சகர்களின் கருத்தாகும்.

மஹிந்ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில இந்தியாவை தனது சட்டைப’பைக்குள் வைத்துக்கொண்டு சீனாவை வாரி அணைத்தமை காரணமாகவே மேற்படி திட்டஙகளு;கும் திருகோணமலை சீனக்குடா விமான தளத்தை சீனாவுக்கு கையளிகும் கைங்கரியமும் இடம் பெற்றதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் இலங்கைக்கு ஏற்பட்டிருக்கும் இனனொரு நெருக்கடி சீனாவின் ஷி யான் 6 கப்பல் வருகையை மீள் பரிசீலனை செய்யுங்கள் என சீனாவை மன்றாடி கேட்கும் அளவுக்கு நிலமை காணப்படுகிறது. இந்திய பாதுகாப்ப அமைச்சர் ராஜ்நாத்; உத்தியோக விஜயமொன்ற மேற்கெண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ள நிலையில் சீனக்கப்பல் வருகை குறித்து மீன் பரசீலனை செய்ம்படி சீனாவிடம் இலங்கை கோரும் நிலைக்கு நிலமைகள் விரிவடைந்து கொண்டு போகிறது.

இனி இலங்கை பக்கமாக வந்து இலங்கை இந்திய தரைவழி இணைப:புக்கு கடும் போக்காளர்கள் அல்லது இந்திய எதிர்ப்பு வாதிகள் காட்டும் ஞாயங்களை நோக்குவோம், தரை வழிப்பாதை இணைப்பு உருவாக்கப்படும் பட்சத்தி;ல் இலங்கை தனது இறையாண்மையை இழக்க நேரிடும் என்பது கடும்போக்காளர்களின் வாதமாகும். ஆதமட்டுமன்றி மிக சிறிய நாடான இலங்கை பொருளாதார சுதந்திரத்தை இந்தியாவிடம் அடைவு வைக்கும் நிலை ஏற்படும், இந்தியா உள்நுழைய சந்தர்ப்பம் வழங்கப்படுமாக இருந்தால் யூரோ நாணயத்தின் செல்வாக்குப்போன்று இந்தியா ரூபாவின் பிழக்கம் விரிவு பெறும், ஒப்பந்தத்தின் பிரகாரம் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் பலவீன நிலையொன்று இலங்கைக்கு ஏற்படும் ,நாம் மேலே குறிப்பிட்டதுபோல் பௌத்தம் தனது செல்வாக்கை இழக்கநேரிடும் என்பதுடன் இலங்கையின் உள்விவகாரங்களிலும் இந்தியா தலையிடும் நிலையொன்று உருவாகும் இந்தியாவின் அதிகார செல்வாக்கு அதிகரித்து நிலமைகள்மோசமாகுமென்பதுடன் இலங்கையின் முடிவெடுக்கும் சுய ஆட்சி தனது இதிகாரத்தை இழந்து மீண்டும் அன்னிய ஆட்சிக்குள் அடிமைப்படும் அவலம் ஏற்படும் என தமது எதிர்பை வெளிகாட்டிவருகிறார்கள். கடும்போக்காளர்கள்.

அக்னியான்

Exit mobile version