இலங்கை: 107 ஜனாதிபதி அலுவலக வாகனங்களை பயன்படுத்தியவர்கள் யார்? வெளியான அறிக்கை

ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து அண்மையில் திருப்பி அனுப்பப்பட்ட அரச வாகனங்களின் ஒதுக்கீடு தொடர்பான விவரங்களை ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ளது.
அரச கட்டிட வளாகத்திற்குள் இடப்பற்றாக்குறை காரணமாக, திருப்பி அனுப்பப்பட்ட வாகனங்கள் பொலிஸ் பாதுகாப்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியினால் தனிப்பட்ட முறையில் நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் இந்த 107 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
திருப்பி அனுப்பப்பட்ட அரச வாகனங்களை காட்சிப்படுத்துவது புதிய நிர்வாகத்தின் நோக்கமல்ல என தெரிவித்த ஜனாதிபதி அலுவலகம், புதிய ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ், அத்தியாவசிய சேவைகளுக்காக வாகனங்களை உடனடியாக ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தின்படி, வாகனங்கள் முன்னர் ஒப்படைக்கப்பட்ட நபர்களின் பட்டியல் பின்வருமாறு;