இலங்கை இளையோர் கிரிக்கெட் அணி அறிவிப்பு: யாழ்ப்பாண வீரருக்கு வாய்ப்பு
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை இளையோர் குழாமை ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று அறிவித்துள்ளது.
நமீபியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில் ஜனவரி 15 முதல் பிப்ரவரி 6 வரை நடைபெறவுள்ள இந்தத் தொடருக்கு, கொழும்பு ரோயல் கல்லூரியின் நட்சத்திர வீரர் விமத் தின்சார தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கண்டி கிங்ஸ்வுட் கல்லூரியின் கவிஜ கமகே துணைத் தலைவராகச் செயல்படுவார்.
இந்த அணியில் யாழ்ப்பாணம் பரி. யோவான் கல்லூரியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் குகதாஸ் மதுலன் இடம்பெற்றுள்ளமை வடக்கு மாகாண கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களுடன் விக்னேஸ்வரன் ஆகாஷ், ஜீவந்த ஸ்ரீராம் உள்ளிட்ட 15 வீரர்கள் பயிற்சியினை முன்னெடுப்பதற்காக இன்று நமீபியா நோக்கிப் புறப்பட்டனர்.
இலங்கை அணி தனது முதல் லீக் போட்டியில் வரும் 17-ஆம் திகதி ஜப்பானை எதிர்கொள்ளவுள்ளது.





