இலங்கை: சீரற்ற வானிலை! வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
இன்று நள்ளிரவு வரை அமுலுக்கு வரும் வகையில் பல மாவட்டங்களில் கடுமையான மின்னல் மற்றும் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
இதன்படி, வட மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில இடங்களில் கடுமையான மின்னலுடன் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
(Visited 1 times, 1 visits today)