இலங்கை தொடருந்து நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் (SLRSMU) இன்று இரவு முதல் தமது தொடருந்து பணிப்புறக்கணிப்பை கைவிட தீர்மானித்துள்ளது.
அதன்படி இன்று நள்ளிரவுக்குள் கடமைக்கு சமூகமளிக்கும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என அமைச்சர் தொழிற்சங்க அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
பணிக்கு வராத அதிகாரிகள் இருந்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவும் கலந்து கொண்ட இந்த கலந்துரையாடல் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
(Visited 11 times, 1 visits today)