இலங்கை போக்குவரத்து பொலிஸாரின் விசேட நடவடிக்கை : 529 பேர் கைது!
இலங்கையில் அமுற்படுத்தப்படும் பொலிஸாரின் விசேட சோதனைகளின் கீழ் குடிபோதையில் வாகனம் செலுத்திய 529 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசேட போக்குவரத்து நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையான கைதுகள் இதுவென பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டத்தை அமுல்படுத்திய சாரதிகளின் மொத்த எண்ணிக்கை 7,264 என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய நாடு முழுவதையும் உள்ளடக்கும் வகையில் கடந்த மாதம் 23 ஆம் திகதி முதல் இந்த விசேட போக்குவரத்து நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)