இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 988,669 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தின் முதல் 21 நாட்களில் மாத்திரம் 91,785 சுற்றுலாப்பயணிகள் வந்துள்ளனர்.
இந்தியாவில் இருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் வந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 31,063 ஆகும்.
அதேநேரம், பிரித்தானியாவில் இருந்து 6,195 சுற்றுலாப்பயணிகளும், சீனாவில் இருந்து 6,043 சுற்றுலாப்பயணிகளும், ஜேர்மனியில் இருந்து 5,526 சுற்றுலாப்பயணிகளும் இலங்கைக்கு வந்துள்ளனர்.
அத்துடன், சீனா, அவுஸ்திரேலியா, பங்களாதேஷ் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.





