கலைப்பொருட்கள் தொடர்பில் நெதர்லாந்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ள இலங்கை
வரலாற்றுப் பெறுமதி மிக்க ஆறு தொல்பொருட்களை இலங்கைக்குத் திருப்பியனுப்புவதற்கான இரண்டு ஒப்பந்தங்கள் நாளை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சில் கைச்சாத்திடப்படவுள்ளன.
1765ல் கண்டியில் உள்ள அரச மாளிகையை டச்சுக்காரர்கள் முற்றுகையிட்டபோது இந்த கலைப்பொருட்கள் டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தால் எடுத்துச் செல்லப்பட்டன.
ஒப்புகை பரிமாற்றம், கடன் ஒப்பந்தங்கள் போன்ற ஒப்பந்தங்கள் கையெழுத்தானது நாளை மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது.
ஏப்ரல் 2022 இல் இலங்கை மற்றும் நெதர்லாந்தைச் சேர்ந்த அறிஞர்கள் குழு மேற்கொண்ட ஆய்வின்படி, நெதர்லாந்தில் உள்ள Rijksmuseum சேகரிப்பில் உள்ள பின்வரும் ஆறு பொருட்கள் இலங்கைக்கு சொந்தமானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, நெதர்லாந்தின் கல்வி, கலாசாரம் மற்றும் விஞ்ஞான அமைச்சுக்கு இந்த ஆறு கலைப்பொருட்களையும் இலங்கைக்கு திருப்பித் தருமாறு இராஜதந்திர கோரிக்கையை முன்வைத்தது.
தொல்பொருட்களை ஒப்படைப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நெதர்லாந்தில் வெளியிடப்பட்டுள்ளது.