இலங்கையில் முட்டையின் விலையை 10 ரூபாவால் குறைக்க நடவடிக்கை

இலங்கையில் முட்டையின் விலையை 10 ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஹசித சந்தீப தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஹசித சந்தீப இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பெரிய அளவிலான முட்டை உற்பத்தியாளர்கள் நடத்தும் மாபியாவை நிறுத்தும் நோக்கில் இந்த வழியில் முட்டைகளின் விலையை குறைக்க சங்கம் முடிவு செய்துள்ளது.
முட்டைகளின் விலையை அதிகரிக்கும் நோக்கில், பல பெரிய அளவிலான முட்டை உற்பத்தியாளர்கள் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளை வாங்கி சந்தைக்கு அனுப்பாமல் சேமித்து வைப்பத்துள்ளனர்.
இதன் மூலம் நாட்டில் முட்டைகளின் பற்றாக்குறை இருப்பதாக பொய்யாகக் காட்ட முயற்சிப்பதாக ஹசித சந்தீப கூறினார்.
இந்த மாபியா சூழ்நிலையில், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முட்டை உற்பத்தியாளர்கள் சரிந்துவிடுவார்கள் என்று அவர் கூறினார்.
சிறு மற்றும் நடுத்தர அளவிலான முட்டை உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் நோக்கில் முட்டைகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.