இலங்கைக்கு கிடைக்கவுள்ள 333 மில்லியன் அமெரிக்க டொலர்கள்!
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான வேலைத்திட்டத்தின் 3வது மீளாய்வில் அதன் பிரதிநிதிகளும் இலங்கை அதிகாரிகளும் ஊழியர் மட்ட உடன்பாட்டை எட்டியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் இன்று (23.11) அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவமும் அதன் நிறைவேற்று சபையும் இதனை அங்கீகரித்ததன் பின்னர் இலங்கைக்கு சுமார் 333 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
கொள்கைகளை தொடர புதிய அரசாங்கம் காட்டும் அர்ப்பணிப்பு, திட்டத்தின் நோக்கங்களை அடைய முக்கியமானது என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)