இந்தியாவிடமிருந்து பசுவின் விந்துவை கொள்வனவு செய்யவுள்ள இலங்கை
உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் பரிவர்த்தனையின் கீழ் உயர்தர கால்நடைகளை இறக்குமதி செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் உயர்தர மரபியல் திறன் கொண்ட கால்நடைகளைப் பெறுவதற்கு 100 மில்லியன் ஒதுக்கப்பட்ட போதிலும், கொள்முதல் நடைமுறையைப் பின்பற்றுவதில் எழுந்துள்ள சிக்கல்களால் தற்போது வரை தேவையான கால்நடைகளை கொள்வனவு செய்ய முடியவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, இது இரு அரசாங்கங்களுக்கிடையில் நேரடியான கொடுக்கல் வாங்கல் என்பதால், பாகிஸ்தான் வர்த்தக அபிவிருத்தி அதிகாரசபையானது சஹிவால் மற்றும் நீலரவி வகைகளில் ஏழு ஆண் வளமான காளைகளை இலங்கைக்கு கொள்வனவு செய்ய இணங்கியுள்ளது.
மேலும், இந்திய தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்திடம் இருந்து 20,000 மாட்டு விந்தணுக்களை பரிவர்த்தனையாக வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, இந்தியா மற்றும் பாகிஸ்தானுடனான ஒப்பந்தங்கள் தொடர்பாக விவசாய மற்றும் கால்நடை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.