இலங்கையில் 150000 சம்பளம் பெறுபவர்களுக்கு 100 சதவீத வரிவிலக்கு அளிக்க நடவடிக்கை!
வருமான வரி வரம்பை மாதாந்தம் 100,000 ரூபாவிலிருந்து 150,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்டதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், “நாங்கள் மூன்றாவது மதிப்பாய்வைத் தொடங்கியபோது, எங்கள் முன்மொழிவுகள் தொழில் வல்லுநர்களுக்கு விதிக்கப்பட்ட வருமான வரி பற்றியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கினோம். வரி வரம்பு ஒரு லட்சத்திற்கு மேல் உள்ளது.
அதை 150,000 ஆக உயர்த்த முடிந்தது. தனிநபர் வருமான வரியின் 1 வது வகையின் திருத்தத்தை ரூ. 500,000 முதல் ரூ. 10 லட்சம் வரை 6% வரிக்கு உட்பட்டு பெற முடிந்தது.”
“அதன்படி மாதம் 150,000 சம்பளம் வாங்குபவருக்கு 100% வரிவிலக்கு. 200,000 சம்பளம் வாங்குபவர் 71% வரிவிலக்கு.”
“ரூ. 250,000 சம்பளம் பெறுபவர் 61% வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
“ரூ. 300,000 சம்பளம் பெறுபவர் 47% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.”
“ரூ. 350,000 சம்பளம் பெறுபவர் 25.5% வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது”
“அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு குறைவான நிவாரணமும், குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு அதிக நிவாரணமும் அளிக்கும் வகையில் சம்பாதிக்கும் போது செலுத்தப்படும் வரியை திருத்துவதில் நாங்கள் வெற்றி பெற்றோம்.” எனத் தெரிவித்துள்ளார்த.