பழங்குடியின சமூகத்திற்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ள இலங்கை!
இலங்கையில் உள்ள பழங்குடியின சமூகத்தின் உரிமைகள் தொடர்பான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தும் வரைவு சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பான அப்போதைய நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் மற்றும் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரின் கூட்டுப் பிரேரணைக்கு 2024 மே மாதம் அமைச்சர்கள் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
அக்கூட்டத்தில், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் பங்கேற்புடன் வரைவு மசோதாவை தயாரிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட கருத்துருவை மேலும் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதற்கமைய, காணி, வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் மற்றும் நிதி போன்ற விடயதானங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள அமைச்சுக்களின் அதிகாரிகள், சட்டமா அதிபர் அலுவலகத்தின் அதிகாரிகள், சட்ட வரைஞர் அலுவலகத்தின் அதிகாரிகள் உள்ளடங்கலாக, ஏற்புடைய துறைசார் ஆர்வலர்களுடன் பங்கேற்புடனும், பிரதமரின் செயலாளர் தலைமையில் சில கலந்துரையாடல் சுற்றுக்களை நடாத்தி, அடிப்படை சட்டமூல வரைபு மேம்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த அடிப்படை சட்டமூல வரைபை அடிப்படையாகக் கொண்டு சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்களும், புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.