இலங்கை: அஹங்கமவில் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் மரணம்
அஹங்கம(Ahangama), பெலஸ்ஸ(Belessa) பகுதியில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் மீது மதில் சுவர் மற்றும் மண் மேடு இடிந்து விழுந்ததில் மூவரும் உயிரிழந்ததாக அஹங்கம காவல்துறை தெரிவித்துள்ளது.
மூன்று தொழிலாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
தொழிலார்கள் வேலை செய்து கொண்டிருந்த போது மதில் திடீரென இடிந்து விழுந்து மூவரும் இடிபாடுகளுக்குள் புதைந்தனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் கொன்னகஹேன(Konnakahena) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், பின்னர் அவர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.





