இலங்கை : கடந்த சில வாரங்களாகவே பலரால் அச்சுறுத்தல் – பாதுகாப்பு வழங்குமாறு அர்ச்சுனா கோரிக்கை!

இலங்கை – புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று (19) காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, பொது அமர்வுகளின் போது தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அமர்வுகள் முடிந்து மீண்டும் யாழ்ப்பாணம் செல்ல திட்டமிட்டுள்ளதாவும், எமது நாட்டில் இந்த விவகாரம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளதால், பொது அமர்வுகளின் போது தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் சபாநாயகருக்கு அனுப்பப்படும் என்று பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.
(Visited 4 times, 1 visits today)