இலங்கை: விருந்துபசார நிகழ்வில் நடந்த அசம்பாவிதம் : ஒருவர் பலி!
திருகோணமலை – கோவிலடி பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வொன்றின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்
சம்பவத்தில் தம்பலகாமம் – கோவிலடி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நண்பர்கள் குழுவினரால் நடத்தப்பட்ட விருந்துபசார நிகழ்வின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தம்பலகாமம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 11 times, 1 visits today)





