இலங்கை – கடலில் நீராடச் சென்ற தென்கொரிய பெண்ணுக்கு நேர்ந்த கதி!

வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிரிஸ்ஸ கடலில் நீராடச் சென்ற தென்கொரிய நாட்டு பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த அனரத்தம் நேற்று (13) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பெண் அலையில் அடித்துச் செல்லப்பட்ட போது, கரையோரப் பாதுகாப்புப் படையினரும், உயிர்காப்புப் படையினரும் அவரை கரைக்கு அழைத்துச் வந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதித்துள்ள போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் 37 வயதுடைய தென்கொரிய பெண் ஆவார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
(Visited 31 times, 1 visits today)