இலங்கை

இலங்கை – வேப்பமர உச்சியில் இருந்து மீட்கப்பட்ட இரு பிள்ளைகளின் தந்தையின் சடலம்…!

புத்தளம் ஆண்டிகம் பகுதியில் 25 அடி உயரம் கொண்ட வேம்பு மரத்தில் தவறான முடிவெடுத்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று(05) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆண்டிகம, மயில்லாவெவ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபருக்கும், மனைவிக்கும் இடையில் கடந்த சில நாட்களாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நேற்று (05) மாலை மயில்லாவெவ பகுதியில் உள்ள குளம் ஒன்றிற்கு அருகிலுள்ள 25 அடி உயரம் கொண்ட பாரிய வேம்பு மரத்தின் மீது ஏறிய நபர், அந்த மரக்கொப்பொன்றில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன்போது, அவ்வழியாக சென்ற நபர் ஒருவர் இதுபற்றி பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

Pathologist on the Worst and Most Painful Ways to Die

சம்பவ இடத்திற்கு சென்ற மஹாகும்புக்கடவல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.அத்துடன், சம்பவ இடத்திற்கு சென்ற புத்தளம் பகுதிக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாம் மரண விசாரணையை நடத்தினார்.

உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.இதன்போது, குறித்த நபர் தூக்கிட்டதன் காரணமாக கழுத்து இறுகியதால் ஏற்பட்ட மரணம் எனத் தீர்ப்பு வழங்கி சடலத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளதாக புத்தளம் பகுதிக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாம் தெரிவித்தார்.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்