இலங்கை – வாய்க்கால் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு!

ஹட்டன், கொட்டகலை ரொசிட்டா நகரில் உள்ள வாய்க்கால் ஒன்றில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் இன்று (02) கண்டு பிடிக்கப்பட்டதாக திம்புல்ல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டகலை நகரில் வடிகால் அமைப்பில் அமைந்துள்ள வாய்க்கால் ஒன்றில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் ஒன்று இருப்பதாக பிரதேசவாசி ஒருவர் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கொட்டகலை ஊடாக பயணித்த ஒருவர் பாதுகாப்பற்ற வாய்க்காலில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலத்தை ஹட்டன் நீதவான் பரிசோதித்ததன் பின்னர் சடலம் டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படும் என திம்புல்ல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
(Visited 24 times, 1 visits today)