இலங்கை : A/L பரீட்சார்த்திகளுக்கு விசேட அறிவிப்பு – 03 நாட்களுக்கு இடைநிறுத்தப்படும் பரீட்சைகள்!
இலங்கையில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக உயர்தர பரிட்சையை மூன்று நாட்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதன்படி நாளை (27) 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் உயர்தரப் பரீட்சை நடைபெறாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. திரு. அமித் ஜயசுந்தர அனைத்து பரீட்சை பரீட்சார்த்திகளுக்கும் தெரிவித்துள்ளார்.
பரீட்சை திணைக்களத்தில் இன்று (26) பிற்பகல் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில், பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. திரு.அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.





