இலங்கை – வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதால் தந்தை தாக்கியதில் மகன் பலி
பூண்டுலோயா டன்சினன் கீழ் பிரிவு தோட்டத்தில் தந்தை தாக்கியதில் 25 வயதுடைய மகன் உயிரிழந்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் திங்கட்கிழமை (30) இரவு நிகழ்ந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: குடும்பத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதால் தந்தையின் தாக்குதலுக்கு மகன் பலியாகியதாக தெரிய வருகிறது.
சம்பவத்தை அடுத்து தோட்ட மக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, காயமடைந்த தந்தை மற்றும் 18 வயதுடைய மகனும் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாக தெரிவிக்ப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணையை பூண்டுலோயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)