இலங்கை: பாடசாலைகளில் சமூக ஊடக தளங்கள்- கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு
பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப், வைபர் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக ஊடக தளங்களை பாடசாலை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தக் குழுக்களின் நிர்வாகிகளாக அதிபர்கள், பிரதி அதிபர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் கடமையாற்ற வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எம்.திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் சமூக ஊடகங்களின் எதிர்மறையான தாக்கங்கள் குறித்து அமைச்சுக்கு அறிக்கைகள் கிடைத்துள்ளதாகவும், மாகாணச் செயலாளர்கள், கல்விச் செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு விரிவான வழிகாட்டுதல்களை வழங்கத் தூண்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 2 times, 1 visits today)