இலங்கை செய்தி

எரிபொருள் விநியோக கோரிக்கைக்கு இந்தியா அளித்த பதில்

இலங்கைக்குத் தேவையான எரிபொருள் இருப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக அமைச்சர் விஜித ஹேரத், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் விடுத்த கோரிக்கைக்கு இந்தியாவிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் விஜித ஹேரத் கடந்த மார்ச் 06 ஆம் திகதி இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது அந்நாட்டு வெளிவிவகார அமைச்சருடன் இது குறித்துக் கலந்துரையாடியதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் யுத்த நிலைமைத் தொடர்ந்தால், இலங்கைக்குத் தேவையான எரிபொருள் இருப்பைப் பெற்றுக்கொள்வது குறித்து அமைச்சர் விஜித ஹேரத் அங்கு விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்படி, அமைச்சரின் இந்தக் கோரிக்கைக்கு இந்திய அரசாங்கம் தமது சாதகமான பதிலை வழங்கியுள்ளதுடன், அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் எதிர்காலத்தில் நாட்டிற்குத் தேவையான எரிபொருள் விநியோகத்தைத் தடையின்றியும் பாதுகாப்பாகவும் பேணுவதற்குத் தேவையான பின்னணி உருவாக்கப்படும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!