இலங்கை : பொதுபாதுகாப்பு தொடர்பில் கேள்வி எழுப்பிய சஜித் : ஆனந்த விஜேபால அளித்த பதில்!
அண்மைய பாதாள உலக நடவடிக்கைகள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவின் செயல் என்பது இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பொது பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்த ஒவ்வொரு துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகக் கூறினார்.
“நாட்டு மக்களின் பொதுப் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பு, மேலும் தேசியப் பாதுகாப்பில் எந்தச் சீர்குலைவையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மேலும், ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவால் இந்த பாதாள உலக நடவடிக்கைகள் தீவிரமடைவது குறித்து அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது.”
(Visited 39 times, 1 visits today)





