இலங்கை

இலங்கை: திருத்தப்பட்ட அரிசி விலை! ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!

ஒரு கிலோகிராம் நாட்டரிசியை 225 ரூபாய் என்ற மொத்த விற்பனை விலைக்கும், 230 ரூபாய் என்ற சில்லறை விலைக்கும் விற்பனை செய்யுமாறு அரிசி விற்பனையாளர்களுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அவதானம் செலுத்தி, இந்த விலையைப் பின்பற்றாத அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அரிசி விற்பனையாளர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஒரு கிலோகிராம் வெள்ளை பச்சரிசியை 215 ரூபா என்ற மொத்த விற்பனை விலையிலும், 220 ரூபாய் என்ற சில்லறை விற்பனை விலையிலும், விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

அதேநேரம், இறக்குமதி செய்யப்படும் நாட்டரிசியை 220 ரூபாவுக்கும், சம்பா அரிசி கிலோகிராம் ஒன்றை மொத்த விற்பனையில் 235 ரூபாவுக்கும், சில்லறை விற்பனையில் 240 ரூபாவுக்கும், கீரி சம்பா கிலோகிராம் ஒன்றை மொத்த விற்பனையில் 255 ரூபாவுக்கும், சில்லறை விற்பனையில் 260 ரூபாவுக்கும் விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி அனுகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

(Visited 26 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்