இலங்கை

இலங்கை- 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை ஜனவரியில் சமர்பிக்க தீர்மானம்!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 2025 ஜனவரி 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ உறுதிப்படுத்தினார்.

அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு பெப்ரவரி 17 ஆம் திகதி நடைபெறும் எனவும் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 27 ஆம் திகதி முதல் மார்ச் 21 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

மேலும், புதிய அரசாங்கம் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பொதுமக்களின் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையிலும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் விரும்பிய அபிவிருத்திக்கான ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும் எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளக் கூடிய வகையில் தயாரிப்பதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பான பாராளுமன்ற விவாதம் டிசம்பர் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நடைபெறும் என அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்