இலங்கை – பேருந்து தரிப்பிடம் ஒன்றிலிருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு!
																																		மதுரங்குளிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வஜிரவத்தை வீதிச் சந்திக்கு அருகில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மதுரங்குளிய பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இன்று (10) அதிகாலை இந்த மரணம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மதுரங்குளிய பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
மரணம் இடம்பெற்ற விதம் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என தெரிவித்த பொலிஸார், உயிரிழந்தவர் இரவு நண்பர்கள் குழுவுடன் மது அருந்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுரங்குளிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
        



                        
                            
