கேரி ஆனந்த சங்கரிக்கு விசா வழங்க இலங்கை மறுப்பு
கனடா நாடாளுமன்ற உறுப்பினர் கேரி ஆனந்த சங்கரிக்கு இலங்கை வருவதற்கான விசா மறுக்கப்பட்டுள்ளது.
ஆனந்த சங்கரிக்கு விசா வழங்க முடியாது என இந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
உலக அரசியலில் இலங்கையின் மோசமான நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்ததன் காரணமாக தனது விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் சங்கரி கூறுகிறார்.
மேலும், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குறிப்பிலும் இது குறித்து அவர் தெரிவித்துள்ளார்.
கேரி ஆனந்த சங்கரி சர்வதேச சமூகத்தில், பெரும்பாலும் இலங்கையில் மனித உரிமைகள் பிரச்சினைகள் மற்றும் போர் மோதல்கள் பற்றி பரவலாகப் பேசியவர்.
இலங்கை அரசாங்கத்தின் பலவீனம் மற்றும் தோல்வியை விமர்சித்தமைக்கான தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கில் விசா நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் வாயை மூடிக்கொண்டு இருக்கப் போவதில்லை எனவும் கேரி ஆனந்த சங்கரி மேலும் தெரிவித்துள்ளார்.