இலங்கை செய்தி

அந்நிய நேரடி முதலீட்டில் $650 மில்லியன் பெற்ற இலங்கை – அமைச்சர் சுனில் ஹந்துன்னெட்டி

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை 650 மில்லியன் அமெரிக்க டாலர்களை அந்நிய நேரடி முதலீட்டில் (FDI) பெற்றுள்ளதாக தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெட்டி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த முதலீடு 64 திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாகவும், இந்த புள்ளிவிவரங்கள் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அதிகரிப்பு என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் பேசிய அமைச்சர் அமைச்சர், “இந்த காலாண்டில் மட்டும் 650 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில், முழு ஆண்டுக்கும் 483 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே பெறப்பட்டன. 2024 ஆம் ஆண்டில், 724 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே பெறப்பட்டன. ஆனால் அது முழு ஆண்டுக்கும் 93 திட்டங்களுக்கு மட்டுமே. BOI தலைவரின் கூற்றுப்படி, இந்த காலாண்டில் மட்டும் 64 திட்டங்களை நாங்கள் ஏற்கனவே பெற்றுள்ளோம், இதில் 650 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளன.” தெரிவித்துள்ளார்

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!