இலங்கை – பிணையில் விடுவிக்கப்பட்டாலும் வீடு செல்ல முடியாத நிலையில் ரணில்!
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இன்று (26) பிணை வழங்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தொடர்ந்து சிகிச்சை பெறுவதற்காக மேலும் சில நாட்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் தங்கியிருப்பார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டதிலிருந்து “அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்” என்ற கருப்பொருளில் பரந்த எதிர்ப்பு இயக்கத்திற்கு பங்களித்த அனைத்து தரப்பினருக்கும் முன்னாள் ஜனாதிபதி அலுவலகம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
முன்னாள் ஜனாதிபதி விக்ரமசிங்க தனது மருத்துவ சிகிச்சையை முடித்த பின்னர் அனைத்து தரப்பினருக்கும் ஒரு உரையை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





