செய்தி

இலங்கை: ரத்துச் செய்யப்படவுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை! வெளியான அறிவிப்பு

தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை இரத்துச் செய்யப்படவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பதவியேற்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் தற்போதைக்கு ஜனாதிபதியாக தெரிவாகி இருக்கும் அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சிக் காலத்திற்குள்ளாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட கடைசி ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்கவே இருப்பார் என்றும் சுனில் ஹந்துன்நெத்தி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தியின் தலைமையில் புதிய அரசாங்கமொன்று அமைக்கப்பட்ட பின்னர் இதற்கான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 99 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி